K.N.Vadivel|
Last Updated:
புதன், 15 ஜூலை 2015 (01:50 IST)
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அளிக்கும் இப்தார் விருந்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வாரா? என பில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சார்பில் , ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. இந்த விருந்துக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வாரா என மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், நியூ ஆயோ கவுன்சில் கூட்டம், மற்றும் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னகள் கூட்டம் போன்றழைகள் நாளை நடைபெற உள்ளதால், ஜனாதிபதி அளிக்கும் இப்தார் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியிகியுள்ளது.
இதே போல, கடந்த ஆண்டும், ஜனாதிபதி அளித்த இப்தார் விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.