செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2015 (13:52 IST)

தேசியக் கொடி மீது பிரதமர் கையெழுத்து போடவில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி மீது கையெழுத்து போடவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


 
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில், இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டார்.
 
அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்ததாக தலைமை சமையற்கலைஞர் விகாஸ் கன்னாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.
 
அப்போது விகாஸ்கன்னா, இந்திய தேசியக்கொடியில் மோடியின் கையெழுத்தை பெற்றதாக கூறப்படுகிறது. அதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, தான் வெகுமதியாக கொடுக்க போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோடி கையெழுத்திட்ட கொடியை விகாஸ்கன்னா ஊடகங்களுக்கும் காண்பித்தார்.
 
ஆனால் தேசியக் கொடி மீது பிரதமர் மோடி கையெழுத்திடவில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தலைமை சமையற் கலைஞரின் மாற்றுத்திறனாளி மகள் கால் விரல்கள் மூலம் அழகிய வேலைப்பாட்டுடன் வடிவமைத்து இருந்த ஒரு துண்டு துணியில்தான் பிரதமர் கையெழுத்திட்டார். அந்த துணியில் வெள்ளை நிறமோ, அசோக சக்கரமோ கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.