கொரோனா 2-ம் அலை பரவலுக்கு பிரதமர் மோடியே காரணம்- மம்தா பானர்ஜி

Sinoj| Last Modified திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:49 IST)

மேற்கு வங்க முதல்வர்
மம்தா பானர்ஜி நாடு முழுவதும் கொரோனா
2ஆம் அலை பரவிவருவதற்கு பிரதமர் மோடியின் லட்சியமே காரணம் என கூறியுள்ளார்.


மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்,
5 கட்டங்களாகத் தேர்தல் முடிவுற்றுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாந்லம் நடியா மாவட்டத்திலுள்ள கலிகனி பகுதியில் முதல்வர் மம்தா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது,நாடு முழுவதும் 1 வருடங்களுக்கு மேலாக கொரோனா தொற்றுள்ளது. இதை கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவுவதற்கு மோடியே காரணம் இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :