மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பொதுவெளியில் ’இந்து அல்லாத ஒருவரின் வீட்டிற்குத் உங்கள் வீட்டு மகள்கள் சென்றால், பெற்றோர்கள் அவர்களின் கால்களை உடைக்க வேண்டும் என்று அவர் பேசியிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. போபாலில் நடந்த ஆன்மிக நிகழ்வில் பேசிய அவர், பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக செயல்படும் பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவதில்...