வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (18:47 IST)

இந்திய மியான்மர் எல்லையில் சக்தி வாய்ந்த குண்டு கண்டுபிடிப்பு

இந்தியா மற்றும் மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த வெடி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
 
மணிப்பூரில் உள்ள சந்தேல் மாவட்டத்தின் மோரே பகுதியில் உள்ள இந்தியா மற்றும் மியான்மர் சர்வதேச எல்லைப்பகுதியில், இன்று  3 கிலோ எடை கொண்ட வெடிகுண்டைப் பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர்.
 
அந்தப் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்து படையினர் பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டு இருந்த போது இந்த குண்டுகளை கண்டெடுத்துள்ளனர்.
 
குண்டுகள் மிகுந்த சக்தி வாய்ந்தவை என்பதால் உடனடியாக பாதுகாப்புப் படை வீரரர்கள் குண்டுகளை செயலிழக்கச் செய்து அகற்றினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
 
அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் உள்ள நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 
 
இம்பாலில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள மோரே எல்லை இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையே சர்வதேச வர்த்தகம் தொடங்கியதில் இருந்து மிக முக்கிய இடமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.