ஜாமியா பல்கலை: போலீஸ் அத்துமீறல் வீடியோவுக்கு பதிலடி வீடியோ

போலீஸ் அத்துமீறல் வீடியோவுக்கு பதிலடி வீடியோ
Last Modified திங்கள், 17 பிப்ரவரி 2020 (08:19 IST)
போலீஸ் அத்துமீறல் வீடியோவுக்கு பதிலடி வீடியோ
கடந்த இரண்டு நாட்களாக ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீசார் அங்கு நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவ மாணவிகளை மூர்க்கத்தனமாக தடியால் தாக்கியது குறித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பலர் பகிர்ந்து போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மாணவர்கள் மீது கடுமையாக தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் போலீசார் தரப்பில் இருந்து தற்போது பதிலடி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜாமியா பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் சிலர் மறைந்திருந்து போலீசார் மீது கற்கள் வீசும் காட்சி உள்ளது. போலீசார் மீது கற்களால் தாக்கியதை அடுத்தே போலீசார் உள்ளே நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது

போலீசார் வெளியிட்டிருக்கும் வீடியோ மற்றும் ஜாமியா பல்கலையின் முன்னாள் மாணவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஆகிய இரண்டின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அதன் பின்னரே ஒரு முடிவு செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :