1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Police Complaint Filed Against Neha Bora Over Controversial Temple Remark

கோவில்களில் பூசாரிகளால் பெண்கள் பாலியல் பலாத்காரம்.. நேஹா போராவின் சர்ச்சை கருத்து..

நேஹா போரா
அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின்  உறுப்பினர் நேஹா போரா, கோவில்களில் பூசாரிகளால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அமிதா சச்தேவா, டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்த அறிக்கை ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலும் உள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு பேச்சுரிமையை வழங்கினாலும், அது முழுமையானது அல்ல என்றும், பிற சமூக உணர்வுகளை மதித்து பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
 
இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சி நேஹா போரா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளது. நேஹா போராவின் கருத்தும், ராகுல் காந்தியின் முந்தைய கருத்துக்களும் சனாதன தர்மத்தையும் இந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
 
தற்போது இந்த விவகாரம் புகார் அளவில் உள்ள நிலையில், காவல்துறையின் விசாரணைக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை தெரியவரும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரூ.33,000 விலையில் ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.. இந்தியாவுக்கு எப்போது வரும்?