வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya
Last Updated : சனி, 23 ஜூலை 2016 (15:30 IST)

கர்நாடகாவில் தமிழ் படமா??? கபாலிக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு: ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

கர்நாடகாவில் தமிழ் படமா??? கபாலிக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு: ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி திரைப்படத்தைத் கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் மோதல் ஏற்பட்டு போலீஸ் தடியடி.



கபாலி திரைப்படம் கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயல், சிவமொக்கா, மண்டியா உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் உள்ள 300 திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது. ஒரு சில திரையரங்குகளில் காலை 4 மணிக்கே கபாலி திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.

இதனை கண்டித்து கன்னட சலுவளி கட்சி உள்ளிட்ட 15 அமைப்புகளை உள்கொண்ட கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கபாலி படத்திற்கு எதிராகவும், ரஜினிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், கன்னடம் அல்லாத மொழிகளின் படங்களை கர்நாடகத்தில் திரையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிற மொழிகளின் பழைய படங்களின் படச் சுருள்களை தீயிட்டு எரித்தனர்.

அப்பொழுது ஒருசிலர் ரஜினிகாந்த் சுவரொட்டிகள், தட்டிகளை அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனை ரசிகர்கள் சிலர் தடுக்க முயற்சித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது மோதலாக உருவாகும் சூழல் ஏற்பட்டதையடுத்து, போலீஸார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் சேதமடைந்தன. அதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதை தவிர்த்து தமிழ் படத்தைத் திரையிடுவதற்கு இது தமிழகம் அல்ல.  கர்நாடகத்தில் கன்னடப் படங்களை மட்டுமே வெளியிட வேண்டும். கபாலி படத்தை 300 திரையரங்குகளில் வெளியிட்டதால், கன்னடப் படங்கள் வெளியிட முடியவில்லை. இதனால், கன்னட திரைப்படத் தொழில் நஷ்டமடைகிறது என வாட்டாள் நாகராஜ் கூறினார்.

இதையடுத்து, கபாலி திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்