தொடர்புடைய செய்திகள்
- போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி சிறுமிகள் கடத்தல்.. துரிதமாக செயல்பட்ட காவல்துறை..!
- லவ் ஜிகாத்தில் சிக்கிவிட்டாரா கும்பமேளா மோனலிசா? என்ன நடந்தது இந்த திருமணத்தில்?
- கும்பமேளா வைரல் பெண் மோனாலிசாவை ஞாபகம் இருக்கிறதா? தந்தையின் எதிர்ப்பை மீறி முஸ்லீம் இளைஞருடன் திருமணம்..!
- கும்பமேளா அழகி மோனலிசாவின் ஆசை இதுதானாம்!.. குவியும் பாராட்டு!...
- சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!
கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கணவர் மீது போக்சோ வழக்கு.. 16 வயது சிறுமியை திருமணம் செய்தாரா?
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் கும்பமேளாவில் பாசி மாலை விற்று சமூக வலைதளங்களில் பிரபலமானவர் மோனலிசா. இவர் சில மாதங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே பர்மான் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையில் மோனலிசாவிற்கு 18 வயது கடந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் மைனர் என்றும், இது 'லவ் ஜிகாத்' என்றும் புகார்கள் எழுந்தன.
மோனலிசா பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், இது குறித்து தேசிய பழங்குடியின ஆணையம் தீவிர விசாரணை நடத்தியது. விசாரணையில் மோனலிசா 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் பிறந்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் திருமணத்தின் போது மோனலிசாவிற்கு வெறும் 16 வயதே என்பது உறுதியானது. சட்டப்படி மைனரை திருமணம் செய்த குற்றத்திற்காக, பர்மான் கான் மீது மத்திய பிரதேச மாநிலம் மகேஷ்வர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடையாள அட்டையில் வயது தவறாக காண்பிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பர்மான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்து மோனலிசா தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
Edited by Siva
