ஜனாதிபதியாக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு: முகர்ஜிக்கு மோடி வாழ்த்து


K.N.Vadivel| Last Updated: ஞாயிறு, 26 ஜூலை 2015 (00:26 IST)
இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
ஜனாதிபதியாக பொறுப்பேற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மதிப்புமிக்க அனுபவம் மற்றும் மதிநுட்பம் மூலம் நமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி 13ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற பிரணாப் முகர்ஜி, வெற்றிகரமாக மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
 
இதனை கொண்டாடும் வகையில், துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு  சிறப்பு விருந்தளித்தார் என்பது குறிப்பிடதக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :