1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Narendra Modi Becomes India's Longest-Serving Head of Government, Surpassing Pawan Chamling's Record

இந்திய அரசாங்கத்தில் 8931 நாள் பதவி வகித்த மோடி.. புதிய சாதனை..!

தமிழ்
இந்தியாவின் அரசாங்க தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
 
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகவும், இந்தியாவின் பிரதமராகவும் என ஒட்டுமொத்தமாக 8,931 நாட்கள் பணியாற்றி அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 
இதற்கு முன்னதாக, சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் 8,930 நாட்கள் பதவி வகித்ததே சாதனையாக இருந்தது; தற்போது அந்த சாதனையை மோடி முறியடித்துள்ளார்.
 
2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நரேந்திர மோடி, தொடர்ந்து 2014, 2019 மற்றும் 2024 ஆகிய மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். 
 
சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமைக்குரிய அவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசாங்க தலைவராகத் தனது 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். 
 
உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழும் மோடியின் இந்த நீண்ட கால அரசியல் பயணம், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான சாதனையாக கருதப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இனிமே இருக்கு உங்களுக்கு!.. ஊழல் லிஸ்ட் என்கிட்ட இருக்கு!.. திமுகவை மிரட்டும் வேல்முருகன்!...