பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: மீண்டும் வர்த்தகம் தொடங்குவது குறித்து ஆலோசனை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் எல்லைப் பதற்றத்தை குறைத்து, அமைதியை கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் மற்றும் அதன் தாக்கம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும் எல்லை வழியாக வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.
Edited by Siva