கொரோனா குறித்து உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 18 மே 2021 (08:36 IST)
கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதீத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒருசில தினங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி முழு அளவில் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இதனிடையே, கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்புப் பணியில் ஏற்பட்ட அனுபவம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுதல் செய்ய உள்ளார். பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாகவும் பிரதமர் கேட்டறிவார் என கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :