எல்லாம் ரெடி ட்ரம்ப்; உங்களுக்காகதான் வெயிட்டிங்! – வீடியோ வெளியிட்ட மோடி!

trump
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (13:05 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையையொட்டி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை இந்தியா வருவதையொட்டி குஜராத் மாநிலமே பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அகமதாபாத்தில் ட்ரம்ப்பை வரவேற்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றனர். அதிபர் வருகைக்காக சாலைகள் புணரமைக்கப்பட்டுள்ளன.

அதிபர் ட்ரம்ப்பும் தனது இந்திய பயணம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அகமதாபாத் மக்கள் பலர் ட்ரம்புக்கு வரவேற்பு அளித்து பேசுகின்றனர். மேலும் ட்ரம்ப் வருகையால் அகமதாபாத் மகிழ்வதாகவும் கூறியுள்ளனர். இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள பிரதமர் மோடி ”இந்தியா உங்களை வரவேற்க காத்திருக்கிறது” என ட்ரம்பை குறிப்பிட்டு ட்வீட்டியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :