வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2015 (14:22 IST)

69வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 69வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி செங்கோட்டைக்கு வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.
 

 
தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர்  நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றுவது, இது 2வது முறை ஆகும். முன்னதாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்திலும் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்திருந்தார்.
 
சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி நகரம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், துணை ராணுவப்படையினர் மற்றும் டெல்லி போலீசார் 12 ஆயிரம் பேர் ஆவர். அவர்கள், விழா நடைபெறும் செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.