அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை!

modi
அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை!
siva| Last Updated: திங்கள், 12 ஏப்ரல் 2021 (19:12 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார் என்பதும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க அவர் வலியுறுத்தினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பிரதமர் மோடி அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இந்த ஆலோசனை ஏப்ரல் 14ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காணொளி மூலம் பிரதமர் மோடி அனைத்து மாநில ஆளுநர்களுடன் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இதில் மேலும் படிக்கவும் :