பெட்ரோல் விலை உயர்வு ஒரு சிறப்புக் கட்டுரை !!

petrol
Today Petrol Price
சினோஜ்| Last Updated: செவ்வாய், 19 ஜனவரி 2021 (19:43 IST)

இவ்வுலகத்தையே புரட்டிப்போட்ட கொரொனாவால் மக்கள் இன்னும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பல நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.


இந்நிலையில் பெரும்பாலான நாட்டிலுள்ள பணம்படைத்தவர்களும் முதலீட்டாளர்களும் அமெரிக்கா டாலர்களிலும், தங்கத்திலும் முதலீட்டு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரும் செல்வமுள்ள வளைகுடா நாடுகளில் தற்போது பொருளாதார இழப்புகள் ஏதுமில்லை என்றாலும் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் மாறுபாடு இல்லையென்றாலும் கூட 138 கோடி மக்கள் வளம் கொணட இந்தியாவில் நாள் தோறும் பெட்ரோல்
விலையில் மாறுபாடுகளைக் காணமுடிகிறது.

சர்வதேச அளவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்றாலும் இந்தியாவில் மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளபடி அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே விலையுயர்வை நிர்ணயித்துக்கொள்ள அறிவித்ததால் சமீக காலங்களில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது.

petrol

கடந்த ஜூலை மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.78.91 ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 77.91 ஆகவும், செப்டம்பர் மாதத்தில் ரூ.78.91 ஆகவும், அக்டோபரில் ரூ. 76.06 ஆகவும்,நவம்பரில் ரூ. 77.80 ஆகவும், டிசம்பரில் ரூ. 79.18 ஆகவும் இருந்த நிலையில் புத்தாண்டு தொடங்கியும் ஜனவரி மாதத்தில் விலை மாற்றமில்லை.

இன்று சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல்
ரூ. 87.63 ஆகவும், டீசல் விலை ரூ.80.67 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை யேற்றம்
குறைய வேண்டுமென்பதுதான் மக்களின் கோரிக்கை ஆகும்.இதில் மேலும் படிக்கவும் :