20 லட்சத்திற்கு மேல் கையில் பணம் இருக்கக் கூடாது - மோடியின் அடுத்தடுத்த அதிரடி?

20 லட்சத்திற்கு மேல் கையில் பணம் இருக்கக் கூடாது - மோடியின் அடுத்தடுத்த அதிரடி?


Murugan| Last Updated: வெள்ளி, 11 நவம்பர் 2016 (12:55 IST)
கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு பலவேறு திட்டங்களை தீட்டி வருவதாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

 

 
கருப்பு பணத்தை ஒரே திட்டத்தால் ஒழித்து விட முடியாது. ஒவ்வொரு கதவாகத்தான் மூட முடியும். அதன் ஒரு பகுதியாகத்தான் பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சமீபத்தில் அறிவித்தார்.
 
அதன்பின், கருப்புப் பணத்தை தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் மற்றும் வங்கி லாக்கர்களில் குறிப்பிட்ட அள்வுக்கு மேல் தங்கம் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கையில் ரூ.20 லட்சத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது. அதற்கு மேல், வைத்திருந்தால் அது சட்ட விரோத பணமாக கருதப்படும் என அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேபோல், காகித ரூபாய் நோட்டுகளை முற்றிலும் ஒழித்து விட்டு, பிளாஸ்டிக் கரன்சிகளுக்கு மாறும் திட்டத்தையும் மோடி கையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால், இதுபற்றி அதிகாரப் பூர்வமான அறிவிப்புகள் இன்னும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. 

 


இதில் மேலும் படிக்கவும் :