”பாஜக பணத்துக்காக கிரிமினல்களுக்கு சீட்டை விற்கிறது'' - பாஜக எம்.பி. குற்றச்சாட்டு


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 26 செப்டம்பர் 2015 (20:52 IST)
பீகாரில் பாஜகவினர் பணத்துக்காக கிரிமினல்களுக்கு சீட்டை விற்கிறார்கள் என்று என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
 
 
இது குறித்து அவர் கூறுகையில், “பீகாரில் சில பாஜகவினர் பணத்தை வாங்கிக்கொண்டு சீட்டுகளை விற்கின்றனர். உண்மையாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை.
 
தற்போது நன்றாக செயல்பட்டுக்கொண்டு இருந்த எம்எல்ஏக்களுக்கு சீட் தரப்படவில்லை. கிரிமினல்களுக்கு சீட் விற்கப்பட்டுள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.
 
நாம் நல்ல ஆட்சி தருவோம் என பொதுமக்கள் நம்பினால், அதற்கு தகுந்தாற்போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். கிரிமினல்களை விட, ஊழலற்றவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பர்” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :