வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (18:08 IST)

ஓட்டுப் போடலன்னா வீட்டை இடிப்போம் : பஞ்சாயத்து உறுப்பினர் அடாவடி

தனக்கு ஓட்டுப் போடாத குடும்பத்தினர் கட்டிய வீட்டை, பஞ்சாயத்து உறுப்பினர் இடிக்க முயன்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நிகழ்துள்ளது.


 

 
பெங்களூர் தேவனஹள்ளி அருகே உள்ள கிராமம் சொன்னஹள்ளி. அங்கு ரேனுகேஸ்வரா என்ற பெண் புதிதாக வீடுகட்டி வருகிறார். அப்போது அங்கு தீடிரென வந்த தனது ஆட்களுடன் வந்த அந்த பகுதி பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஷ், வீடுகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடியதோடு, அந்த வீட்டை இடிக்கவும் முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து ரேனுகேஸ்வரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
விசாரணையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வெங்கடேஷ், அங்கு சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ரேனுகேஸ்வராவின் குடும்பம் வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அவரின் வீட்டை இடிக்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
மேலும், அந்த இடம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என்று வெங்கடேஷ் கூறுகிறார். ஆனால், அந்த இடம் தனக்கு சொந்தாமனது, அதற்கான ஆதரங்கள் தன்னிடம் இருப்பதாக ரேனுகேஸ்வரா கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.