1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (14:16 IST)

'கனரா வங்கி' இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்கள்

'கனரா வங்கி' இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்கள் பணத்தின் நிலை என்ன???

இந்தியாவில் உள்ள பெரிய வங்கிகளில் ஒன்றாக இருந்து வரும் கனரா வங்கியின் இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


கனரா வங்கி இணையதளத்தில் நடந்து வரும் பணப் பரிவர்த்தனைகளை முடக்கும் நோக்கில் இந்த சைபர் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. போலியான இண்டர்நெட் முகவரி ஒன்றை வங்கியின் இணையதளத்திற்குள் செலுத்தி கணக்கு விபரங்களை திருட பாகிஸ்தான் ஹேக்கர்கள் முயற்சித்துள்ளனர்.

வங்கியின் இணையதள பக்கத்தை முடக்கிய பின், 'பைசல் 1337; நாங்கள் பாகிஸ்தான் சைபர் தாக்குதல் குழு; உங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்; www.facebook.com/Pakistan1337. பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கூறப்பட்டிருந்தது.  

இந்த சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள் ரிசர்வ் வங்கி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. கனரா வங்கியும் உடனடியாக சைபர் கிரைம் பிரிவில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கமான சர்வரை தவிர்த்து 'ஸ்டேன்பை' சர்வருக்கு பரிவர்த்தனைகளை மாற்றியது. இதனால் பணப் பரிவர்த்தனைகளில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் ஹேக்கர்களின் முயற்சி தோல்வியடைந்தது. வங்கியின் தகவல்கள் எதையும் அவர்களால் திருட முடியவில்லை.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்