வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (13:19 IST)

பிஹார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்ணின் பெயர்.. அதிர்ச்சி தகவல்..!

பிஹார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்ணின் பெயர்.. அதிர்ச்சி தகவல்..!
பிஹாரில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கடந்த 1956-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த ஒரு பாகிஸ்தான் பெண்மணி, மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வெளிநாட்டினர் விசா காலம் முடிந்த பின்பும் இந்தியாவில் தங்கியிருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தி வந்த விசாரணையில், பாகிஸ்தானை சேர்ந்த இம்ரானா கானம் என்பவர் பகல்பூரில் வசித்து வருவதும், அவர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
 
இது குறித்து கூறிய அதிகாரி, ‘ ஃபர்சானா கானம், மிகவும் வயதானவர், உடல்நலக்குறைவால் பேசும் நிலையில் இல்லை. துறையின் உத்தரவின்படி, அவரது பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் பணியை தொடங்கினேன். அவரது பாஸ்போர்ட்1956-ஆம் ஆண்டிலும், விசா 1958-ஆம் ஆண்டிலும் பெறப்பட்டுள்ளது. அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்" என்று தெரிவித்தார். 
 
இந்த சம்பவம், தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு தீவிர திருத்த பணியின் ஒரு பகுதியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 
பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதும், ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டுகளும், ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படையான தேர்தல் முறையை பேணுவதில் உள்ள சவால்களை காட்டுகின்றன.
 
Edited by Siva