1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (06:27 IST)

இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயதங்கள்: சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு

இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அணு ஆயதங்கள் அதிகமாக உள்ளன என்று ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.


 

 
பாகிஸ்தானிடம் 110 முதல் 130 அணு ஆயுதங்கள் வரை உள்ளன. அதே நேரத்தில் இந்தியாவிடம் 100 முதல் 120 அணு ஆயுதங்கள் வரை உள்ளன. பல்வேறு நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. அதே நேரத்தில் சீனா அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது.
 
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை ஏவுகணைகள் மூலம் செலுத்தும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளன. வடகொரியாவும் தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது.
 
இந்த ஆண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் மட்டும் 15,395 அணு ஆயுதங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த நாடுகளிடம் மொத்தம் 15,850 அணு ஆயுதங்கள் இருந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.