1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Owaisi's Bold Statement: Muslim Population Will Never Surpass Hindus in India

இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை இந்துக்களை மிஞ்சுமா? ஒவைசி பதில்..!

Owaisi
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக எழுப்பப்படும் புகார்களுக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். 
 
தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் இந்துக்களின் எண்ணிக்கையை மிஞ்சாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
 
உலக நாடுகள் பலவற்றில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டுமே 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர் என பிரதமர் மோடி கூறியதை ஒவைசி சுட்டிக்காட்டினார். ஆனால், இந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்துக்கள் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக் கூறுவதை விமர்சித்த ஒவைசி, "அதை அவரே செய்யவில்லை" என சாடினார். 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!