வெறும் ரூ. 299-க்கு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவா? உங்கள் வங்கி கணக்கு காலியாகலாம்! எச்சரிக்கை பதிவு
தற்போது சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் ஒரு புதிய மோசடி பரவி வருகிறது. நெட்ஃபிக்ஸ் , அமேசான் பிரைம் , ஜியோ ஹாட்ஸ்டார் , ஜீ5 போன்ற முன்னணி ஓடிடி தளங்களின் சந்தாக்களை வெறும் ரூ. 299 என்ற மிகக்குறைந்த விலையில் தருவதாக கூறி மோசடி கும்பல் மக்களை வலைவீசி தேடுகிறது.
குறைந்த விலையில் 'காம்போ' ஆஃபர் என்ற பெயரில் விளம்பரங்களை செய்யும் இவர்கள், ஆர்வமுள்ளவர்களிடம் மொபைல் எண் மற்றும் வங்கி விவரங்களை கேட்கிறார்கள். பின்னர் ஒரு QR Code அல்லது போலியான லிங்க் ஒன்றை அனுப்பி பணம் செலுத்துமாறு கூறுகிறார்கள்.
நீங்கள் பணம் செலுத்திய அடுத்த நிமிடம், உங்கள் பணம் திருடப்படுவதுடன், ஓடிடி சந்தாவும் கிடைக்காது. மேலும், உங்கள் தனிப்பட்ட தரவுகள் எதிர்கால மோசடிகளுக்காக திருடப்படுகின்றன.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது செயலிகள் மூலம் மட்டுமே சந்தாக்களை புதுப்பிக்கவும்.
வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமில் வரும் அறிமுகமில்லாத லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்.
யாரிடமும் உங்கள் UPI PIN அல்லது OTP பகிர வேண்டாம்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை அவர்களின் அதிகாரப்பூர்வ செயலிகளில் மட்டும் சரிபார்க்கவும்.
விலை குறைவாக இருக்கிறது என்று ஆசைப்பட்டு, உங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்காதீர்கள். விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்த பாதுகாப்பு.
Edited by Siva
