சூப்பர் ஸ்டாருக்கு கண்ணில் ஆபரேஷன்..ரசிகர்கள் அதிர்ச்சி

amithab bachan
sinoj| Last Modified திங்கள், 1 மார்ச் 2021 (20:26 IST)
கடந்தாண்டு கொரொனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குணமடைந்தார்.

பின்னர்
தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளுடன் அவர் தொகுத்து வழங்கும் குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதேபோல் அவர் நடிப்பாக
ஒப்புக்கொண்ட படங்களிலும் அவர் நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் மற்றும் சினிமாதுறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், அவர் கல்லீரல் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் கண்ணில் ஆபரேஷன் செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நடிகர் அமிதாப் பச்சன் கூறும்போது,
இந்த வயதில் கண்களில் ஆபரேஷன் செய்வது மிகவும் சிக்கலானது.


இனிமேல் நடப்பது நல்லதாகவே நடக்கும் என்று நினைக்கி்றேன். கண்கள் தற்போது மூடியிருப்பதால் என்னால் எழுதுவதற்கோ படிப்பதற்கோ முடியவில்லை. இருப்பினும் இசையை கேட்டு வருகிறேன் என வருத்ததுடன் கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :