வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2016 (12:11 IST)

அம்மா குடிநீருக்கு போட்டியாக மோடி குடிநீர்; அதுவும் 5 ரூபாய்க்கு

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பேருந்து நிலையங்களில் ரூ.10-க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்து வருகிறது. இதே போல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் ரூ.5-க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்ய உள்ளது.


 
 
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். ரூ.5-க்கு ஒரு லிட்டர் தண்ணீர் வழங்கும் இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 7000 தண்ணீர் இயந்திரங்களை அமைக்க ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ரெயில்வே நிர்வாகம் இணைந்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.
 
மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் 7 தண்ணீர் இயந்திரமும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 தண்ணீர் இயந்திரமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.