செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 10 மே 2014 (12:56 IST)

தேர்தல் விதிமீறல் - ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ராகுல் காந்தி இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் விதியை மீறியதாக வந்த புகாரையடுடத்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தி கடந்த மே 1ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன் நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பாஜகவையும் நரேந்திர மோடியையும் தாக்கிப் பேசினார்.
 
‘பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடெங்கும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் என்றும் 22 ஆயிரம் பேர் பலியாகக்கூடும் என்றும் இதற்கு முன்னர் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டது இல்லை’ என்றும் கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ராகுலின் இந்த பேச்சு திட்டமிட்டு வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக பாஜக தலைவர்கள் கூறினர்.
 
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராகுல் காந்தியின் பேச்சு அமைந்திருப்பதாக பாஜக தலைவர்கள் கூறினர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர். ராகுலின் பேச்சு பதிவு அடங்கிய CDயையும் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
 
CDயை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள், ராகுலின் பேச்சு தேர்தல் விதிமீறல் என்பதை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 12ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி தன்பேச்சுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இதேபோல, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்குப்பதிவு இயந்திரங்களை ராகுல் காந்தி பார்வையிட்டதாக புகார் எழுந்தள்ளதும் குறிப்பிடத்தக்கது.