1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2016 (04:00 IST)

பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை - சொல்வது ப.சி.

பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை - சொல்வது ப.சி.

மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை என்று முன்னாள் நிதியைமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.


 
 
மத்திய பொது பட்ஜெட் மக்களவையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், முன்பு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தலைமையிலான அரசு கொண்டு வந்த அதே திட்டங்களை தான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் இருந்து, காங்கிரஸ் அரசை பாஜக அரசு பின்பற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

மேலும், இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. இதனால், அனைத்து துறைகளிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது என்றார்.