முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!
கேரள பாஜக மாநிலத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், கோழிக்கோட்டில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால்தான் மத்திய அமைச்சரவையில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறியது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"முஸ்லிம்கள் எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், மத்திய அமைச்சரவையில் அமைச்சர்கள் இல்லாமல் போவதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.க்கள் இல்லாததால் அமைச்சர்கள் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், முஸ்லிம்கள் தொடர்ந்து காங்கிரஸுக்கு வாக்களிப்பதால் ஏதேனும் பலன் உண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாமல் அமைச்சர்களை நியமிக்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டை அவர் உறுதியாக தெரிவித்தார்.
Edited by Siva