வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.NVadivel
Last Modified: புதன், 15 ஜூலை 2015 (23:01 IST)

அரசு விளம்பரத்தில் ஜெயலலிதா படம்: உச்ச நீதிமன்றத்தில் பிரசாத் பூஷன் வழக்கு

தமிழ்நாடு மற்றும் டெல்லி முதலமைச்சர்களின் படங்கள் அரசு விளம்பரங்களில் வெளியிடுட்டுள்ளதாக கூறி, உச்ச நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

 
பொது நல வழக்கு மையம் என்ற அமைப்பு சார்பில், பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக அரசு, கடந்த மே 26 , 30 ஆம் தேதிகளிலும், ஜூன் 2, 4 ஆம் தேதிகளிலும் நான்கு ஆண்டு ஆட்சி சாதனைகளை விளம்பரப்படுத்தியுள்ளது. இதில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது.
 
அதே போல, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் படத்தைப் போட்டு விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.526 கோடி செலவிட்டுள்ளது.
 
ஆனால், கடந்த மே 13ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பத்திரிக்கை விளம்பரங்களில் முதலமைச்சரின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி, தமிழ்நாடு மற்றும் டெல்லி அரசுகள் முதலமைச்சர் படத்தைப் போட்டு விளம்பரம் செய்துள்ளது.
 
எனவே, தமிழக அரசு மற்றும் டெல்லி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதி மன்றம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.