வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2016 (13:16 IST)

புதிய ரூபாய் நோட்டில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அரசு அதிகாரி கைது!

புதிய ரூபாய் நோட்டில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அரசு அதிகாரி கைது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி சந்திரகாந்த் சுவர்தேகர் என்பவர் பணி உயர்வு வழங்க லஞ்சம் வாங்கி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.


 
 
மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் தனக்கு தலைமை ஆசிரியராக பணி உயர்வு வேண்டும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரி சந்திரகாந்த் சுவர்தேகர் உதவியை நாடினார்.
 
ஆனால் அந்த அதிகாரி அதற்கு 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்க இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொண்டு சென்றுள்ளார் அந்த ஆசிரியர். பின்னர் அவரை கையும் களவுமாக அவர்கள் பிடிக்க தீர்மானித்தனர்.
 
இதனையடுத்து சமீபத்தில் வெளியான புதிய 2000 ரூபாய் நோட்டு 17 மற்றும் பழைய ரூபாய் நோட்டு என மொத்தம் 40 ஆயிரம் ரூபாயை அந்த அதிகாரி சந்திரகாந்த் சுவர்தேகரிடம் கொண்டு கொடுத்தார் அந்த ஆசிரியர். இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.