1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2016 (16:01 IST)

துப்பினால், தூர்வார வைப்போம்: வருகிறது புதிய சட்டம்

பொது இடங்களில் துப்பி காச நோய் உள்ளிட்ட பல நோய்களை பரப்பி, நாட்டை சுகாதார கேட்டுக்கு உள்ளாக்கும் நபர்களை தண்டிக்க புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மஹாராஷ்டிர அரசு வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்ய உள்ளது.


 
 
பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்து நோய்பரப்பும் காரணியாக இருக்கும் செயல்களை தடுக்க மஹாராஷ்டிர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தடுக்கும் சட்டம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தீபக் சாவந்த் கூறியபோது:-
 
ஆண்டி-ஸ்பிட்டிங் என்னும் இந்த மசோத பொது இடங்களில் எச்சில் உமிழும் நபர்களை தண்டிப்பதோடு, அதனை தடுக்கவும் வழிவகுக்கும். மாநிலத்தில் பரவி வரும் தொற்று நோய்களை தடுக்க இந்த மசோதாவை கொண்டு வர இருப்பதாக கூறினார்.
 
நீதித்துறை அதிகாரிகளுடன் விவாதித்து வருகிறர மார்ச் 9-ஆம் தேதி தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த மசோத கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
இந்த மசோதாவின் படி, பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்கள் முதல் முறை தண்டிக்கப்படும் போது 1000 ரூபாய் அபராதம் மற்றும் ஒரு நாள் முழுவதும் அரசு அலுவலகம் அல்லது பொது இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவேண்டும். இரண்டாவது முறையாக தண்டிக்கப்படும் போது 3000 ரூபாய் அபராதமும், மூன்று நாள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். மூன்றாவது முறை தண்டிக்கப்படும் போது 5000 ரூபாய் அபராதமும், ஐந்து நாள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.