1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. NEET UG 2026 Admit Card Released: Exam Date, Pattern and Key Details for Aspirants

மே 3ஆம் தேதி நீட் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு மற்றும் முக்கிய தகவல்கள்

நீட் தேர்வு 2026
2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை நீட்  தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
 
தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தும் இந்த தேர்வின் மூலம், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் இத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 3-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இத்தேர்வு 552 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட 30 நகரங்களிலும், துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட 16 வெளிநாட்டு இடங்களிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
 
இந்த ஆண்டு இதுவரை இல்லாத சாதனையாக 26 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும், ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்களும், தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைப்பும் செய்யப்படும். 
 
விண்ணப்பதாரர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
2026ல் மேற்குவங்கம்... 2029ல் டெல்லி.. டார்கெட் பிக்ஸ் செய்த மம்தா பானர்ஜி..