நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன தெரியுமா?

neet
நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன தெரியுமா?
Last Updated: வெள்ளி, 3 ஜூலை 2020 (19:55 IST)
2020 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் இருந்தது
இதனை அடுத்து நீட் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை சற்று முன்னர் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதில் நீட் தேர்வை செப்டம்பர் 13ஆம் தேதி நடத்தலாம் என
பரிந்துரை செய்துள்ளதாகவும் அதன்படி செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீட்தேர்வு மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :