தொடர்புடைய செய்திகள்
- 12ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் - திருப்பூரில் மாணவி தற்கொலை!...
- பணம் கொடுக்கலான காலி!.. மிரட்டிய சாமியார்!.. கல்லூரி மாணவி தற்கொலை!..
- காதலிக்கக் கூடாது என கண்டித்த கல்லூரி முதல்வர்.. தற்கொலை செய்த மாணவி.. பெரும் பரபரப்பு..!
- 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. AI தொழில்நுட்பம் காரணமா?
- "சாரி மம்மி, சாரி டாடி”. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த கணினி அறிவியல் மாணவி..!
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை: 12-ம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண்கள் எடுத்தவர்..
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், 23 வயதான ரியா குமாரி தாப்பா என்ற இளம் பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 1999 கார்ஜில் போரில் பங்கேற்ற ஒரு ராணுவ வீரரின் மகள் ஆவார். மதியம் உணவிற்காகத் தாயார் கூப்பிட சென்றபோது, ரியா தனது அறைக்கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது அறையிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை குறிப்பில், "ஐ லவ் யூ மம்மி, பப்பா. இதில் யாருடைய தப்பும் இல்லை" என்று இந்தியில் எழுதியுள்ளார். மேலும், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், தனது சொந்த திறமையின்மையே இந்த முடிவுக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரி அங்கித் கந்தாரி கூறுகையில், ரியா தனது 12-ம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தவர். ஆனால், தனது முதல் முயற்சியில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் ஜூன் 21 அன்று நடக்கவிருந்த நீட் மறுதேர்விற்கு அவர் தீவிரமாக படித்து வந்துள்ளார். படிப்பில் ஏற்பட்ட தொடர் ஏமாற்றம் மற்றும் விரக்தி காரணமாகவே அவர் இந்தத் தீவிர முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
