வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (08:46 IST)

பணிப்பெண்கள் பாலியல் பலாத்காரம் : விசாரணைக்கு சவுதி ஒத்துழைக்க வேண்டும்

பணிப்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு சவுதி அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. 
 
இந்தியாவுக்கான சவுதி அரேபிய தூதரக செயல்பட்டு வருபவர் சவுது முகமது. இவரது வீட்டில் பணிபுரிந்த இரண்டு நேபாள பெண்களை தூதரும், அவரது வீட்டிற்கு வந்த விருந்தினர்களும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
 
சவுதி தூதர் தங்களை கடுமையாக தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த இரண்டு நேபாள பெண்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அந்த இரண்டு பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தெரியவந்தது.
 
இக்குற்றச்சாட்டு குறித்து குர்கான் காவல் துறையினரிடம் விளக்கம் அளிக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், சவுதி தூதர் சவுது முகமதுவை வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து தனது நீண்ட விளக்கத்தை சவுது முகமது குர்கான் காவல்துறையினரிடம் அளித்தார். 
 
இந்நிலையில் தங்களது தூதர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்றும், தூதரக அதிகாரி மீது விசாரணை நடத்தக்கூடாது என்றும் சவுதி அரேபிய அரசு தெரிவித்து வருகிறது. 


 
 
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கும் வகையில் சவுதி அரேபிய தூதர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேபாள அரசும் இந்தியாவை தொடர்ந்து வலியுறுத்தி  வருகிறது.
 
இதனிடையே பணிப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இந்திய சவுதி அரசை வலியுறுத்தி உள்ளது.