தொடர்புடைய செய்திகள்
- பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!
- 18 இந்திய கப்பல்களில் 8க்கு மட்டுமே அனுமதி.. ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 10 கப்பல்கள்.. மத்திய அரசு அவசர ஆலோசனை..!
- லடாக்கில் பனிச்சரிவில் புதைந்த வாகனங்கள்!.. 7 பேர் பலி!..
- ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் எடுக்க வந்த ஜோடியை அடுத்து நொறுக்கிய உள்ளூர் மக்கள்.. என்ன காரணம்?
- 23 ஆண்டுகளாக இறந்து போன மகனுக்கும், காதலிக்கும் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்.. ஒவ்வொரு ராமநவமியிலும் கொண்டாட்டம்..!
கள்ளக்காதலியை வெட்டி உடலின் பாகங்களை பிரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி.. திடீரென போலீசில் சரண்..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் தனது காதலியை படுகொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐஎன்எஸ் டேகா தளத்தில் பணியாற்றும் ரவீந்திரா , டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான மௌனிகா என்பவருடன் கடந்த 2021 முதல் தொடர்பில் இருந்துள்ளார். ரவீந்திராவிற்கு திருமணமாகியும் இத்தொடர்பு நீடித்த நிலையில், மௌனிகா அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ரவீந்திராவின் மனைவி ஊருக்கு சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த மௌனிகாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை ரவீந்திரா கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து, உடலை தலை, கைகள் மற்றும் உடல் என பல பாகங்களாக வெட்டியுள்ளார்.
சில பாகங்களை குளிர்சாதன பெட்டியில் ஒளித்து வைத்துவிட்டு, தலை மற்றும் கைகளை வேறு இடத்தில் எரிக்க முயன்றுள்ளார். பின்னர் அவரே காவல் நிலையத்தில் சரணடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
