ஒடிசா மாநில முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவியேற்பு

Suresh| Last Modified புதன், 21 மே 2014 (11:58 IST)
ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இன்று காலை பதவியேற்றார்.
புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக்கும் முக்கியத் துறை அமைச்சர்களும் பதவியேற்றனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்
நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 117 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒடிசாவில் ஆட்சி அமைக்கிறது.

பதவியேற்பு விழாவை ஒட்டி ஆளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நவீன் பட்நாயக் ஒடிசா முதலமைச்சராக 4 ஆவது முறையாக பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தத்தது.


இதில் மேலும் படிக்கவும் :