1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 19 மே 2014 (16:16 IST)

நரேந்திர மோடி பற்றி பாகிஸ்தான் நாளிதழ் கருத்து

இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திரமோடியைப்பற்றி பாகிஸ்தானி நாளிதலான ‘டெய்லி டைம்ஸ்’ கருத்து வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பாக அந்நாளிதலில் வெளியான செய்தி: "முஸ்லிம்களையும், பக்கத்து நாடான பாகிஸ்தானையும் நரேந்திர மோடி பகைத்துக் கொள்ள மாட்டார். இணக்கமான முறையில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துவார்.
 
முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணியின் ஆட்சியில் பாகிஸ்தானுடன் இணக்கமான நல்லுறவைப் பேண நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே வழிமுறையை மோடியும் பின்பற்றுவாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் கூறும்.
 
பாஜகவின் இந்துத்துவக் கொள்கையால் இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் கவலை அடைந்துள்ளது உண்மையே. மத ரீதியான வன்முறை, மத அடிப்படைவாதம் ஆகியவை தொடர்பாக தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புறந்தள்ளி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கக்கூடிய நிலையை மோடி அடைந்துள்ளார்.
 
1984 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையில் அமைந்த ஆட்சிக்குப் பின்பு, இந்தியாவில் இப்போதுதான் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையவுள்ளது" என்று நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் முன்வைத்து டெய்லி டைம்ஸில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.