வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2015 (06:00 IST)

அப்துல் கலாம் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 

 
டெல்லியில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 84ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார். மேலும், அப்துல் கலாமின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியையும் திறந்து வைத்தார்.
 
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாகவும், வழிகாட்டியாகவும் உள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.