பிரதமர் உயிருக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை


Abimukatheesh| Last Modified வெள்ளி, 29 ஜூலை 2016 (11:48 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 

 
இந்தியாவின் முன்னால் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் அனைவரும் குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து உரையாற்றுவது வழக்கம்.
 
ஆனால் மோடி அதை கடைப்பிடிக்காமல் அந்த கூண்டுக்கு வெளியே உரையாற்றினார். இந்நிலையில் வரும் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து பேச வேண்டும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
 
ஐஎஸ் தீவிரவாதிகள் தவிர, ஹிஜ்புல் முஜாஹுதீன், லஷ்கர் - இ - தொய்பா, ஜெயிஸ் - இ - முகமது உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகள் பிரதமர் மோடிக்கு குறி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :