”உலகம் சுற்றும் வாலிபன்” - மோடிக்கு மூன்றாவது இடம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 26 செப்டம்பர் 2015 (18:49 IST)
வெளிநாடுகளுக்கு அதிக முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
 
 
வெளிநாடுகளுக்கு அதிக முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடத்தில் உள்ளார். புதின் 2000 மே முதல் 2001 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 92 நாட்களுக்கு 41 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். .
 
இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 2010 மே முதல் 2011 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 71 நாட்களில் 41 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இருவருக்கும் அடுத்தப்படியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2014 மே - 2015 செப்டம்பர் வரையிலான காலகட்டம் வரை, 69 நாட்களில், 29 முறை பயணம் செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :