எனக்கும், நிதீஷ் குமாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த மோடி சதி: லாலு அலறல்


K.N.Vadivel| Last Updated: ஞாயிறு, 26 ஜூலை 2015 (01:04 IST)
எனக்கும், பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி சதி செய்வதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
 
 
இது குறித்து, பாட்னாவில்  ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பிகார் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் அடுத்தடுத்து நல்லாட்சிகளை வழங்கி வருகின்றன. இதையே மக்களும் விரும்புகின்றனர்.
 
பிகாருக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. இதனை மனதில்  வைத்து,  பிரதமர் நரேந்திர மோடி சில அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார். அதன் முதல்கட்டமாக, எனக்கும்,  பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி சதி செய்து வருகிறார். அவரது சதித் திட்டம் பலிக்காது. விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :