மோடி என்னை கொலை கூட செய்யலாம்: கெஜ்ரிவால்


Abimukatheesh| Last Modified வியாழன், 28 ஜூலை 2016 (04:25 IST)
பிரதமர் மோடி என்னை கொலை கூட செய்யலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

 
டெல்லி முதல்வr அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மோடி அரசுக்கும், கடும் மோதல் நிலவி வருகிறது. பல்வேறு வழக்குகள் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவரும் நிலையில், மோடி மீது பல அதிரடி குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் முன்வைத்து வருகிறார்.
 
அக்கட்சி சார்பில் தனது ஆதரவாளர்களுக்கு 10 நிமிட வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- 
 
நாம் மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தற்போதைய சூழ்நிலை மிகவும் மோசமாக மாறக்கூடும். அவர்கள்(மோடி அரசு) எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். அவர்கள் நம்மை கொலை செய்யவும் முயற்சிக்கலாம். அவர்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கக்கூடும். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். 
 
மத்தியில் ஆளும் பாஜக அரசு டெல்லியில் எனது ஆட்சியை சீர்குலைக்க முயற்சிக்கிறது. பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சியை ஒழி்த்துக்கட்ட சதி செய்து வருகிறார். 
 
டெல்லியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் மோடி மிகவும் கோபமாகவும், விரக்தியடைந்த நிலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. சிறிய காரணங்களுக்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்படுகிறார்கள். சமீப காலமாக எனது கட்சியை சேர்ந்தவர்கள் மீதான கைது நடவடிக்கையின் பின்னணியில் மோடி உள்ளார். இருந்தும் எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை, என்று கூறியுள்ளார். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :