புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என்.ரங்கசாமி!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 7 மே 2021 (14:06 IST)

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் என்.ரங்கசாமி முதல்வராக பங்கேற்றார். நடந்து முடிந்த புதுவை சட்டமன்ற தேர்தலில்
என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதில் மெஜாரிட்டி
என்.ஆர்.காங்கிரஸ் என்பதால் அக்கட்சியினர் ஒருமனதாக என்.ரங்கசாமியை தேர்வு
செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும்
பா.ஜ.க. கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :