தொடர்புடைய செய்திகள்
- கொல்கத்தாவில் முதல்முறையாக தொழுகைகள் இல்லாத சாலை: முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவால் மாற்றம்..!
- தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!
- தவெக அமைச்சர்கள் பதவியேறு விழா!.. மீண்டும் முதலிடத்தில் வந்தே மாதரம்!..
- 1.69 கோடி சாதி சான்றிதழ்கள் போலியா? ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்த மேற்குவங்க முதல்வர்..!
- தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவருக்கு தலைமை செயலாளர் பதவி.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!
இந்தியாவில் வாழ விரும்பினால்.. வந்தே மாதரம் பாட வேண்டும்: முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கறார்..
இந்தியாவில் வாழ விரும்பும் எவரும் கண்டிப்பாக வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும்; இதுதான் சனாதன கலாசாரம்" என்று மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அதிரடியாக பேசியுள்ளார். அவரது இந்த திட்டவட்டமான கருத்து தேசிய அளவிலும், குறிப்பாக மேற்குவங்க அரசியல் வட்டாரத்திலும் புதிய விவாதத்தையும் பெரும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
அண்மையில் மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாக பாடப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அரசின் இந்த அதிரடி உத்தரவுக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. குறிப்பாக, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அரசு பள்ளிகளில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற மேற்குவங்க அரசின் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் வகையிலேயே முதலமைச்சர் சுவேந்து அதிகாரி இத்தகைய கருத்துக்களை முன்வைத்துள்ளார். தேசப்பற்றையும் நாட்டின் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் இப்பாடலை பாடுவதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கக் கூடாது என்றும், நாட்டில் வசிக்கும் அனைவரும் தேசிய விழுமியங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
/edited by Siva
