1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasn
Last Modified: வியாழன், 29 ஜனவரி 2015 (17:41 IST)

ஓடும் ரயிலில் இருந்து ரயில்வே காவலரால் தூக்கி வீசப்பட்ட பெண் மரணம்

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில், ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர், ரயில்வே காவலரால் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரிதா, தனது உறவினர்களுடன் கான்பூரில் வேலை செய்யும் தனது கணவர் பார்வேஸ் பாலை பார்க்க சென்றுள்ளார். ஹவுரா - அமிர்தசரஸ் எஸ்பிரஸ் ரயிலில் தனது உறவினர்களுடன் அசான்சோலில் இருந்து கான்பூர் சென்றுள்ளார். ரயில் அதிகமான கூட்டம் இருந்ததால், ரிதா தனது 18 மாத குழந்தை காஜல், அப்பா மானிக் பால் மற்றும் சகோதரர் ஜெய்தீப் பால் ஆகியோருடன் பார்சல் பெட்டியில் ஏறியுள்ளார் என்று கூறப்படுகிறது. ரயில் வாரணாசி வந்ததும், ரயில்வே காவல்துறையினர் பார்சல் பெட்டிக்குள் வந்ததுள்ளனர். அவர்களிடம் பணம் கேட்டுள்ளனர். 
 
ரயிலில் ஏறிய காவல்துறையினர் எனக்கு பணத்தை கொடுங்கள் இல்லையென்றால் ரயிலைவிட்டு இறங்குங்கள் என்று மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்களை ரயில் பெட்டியை விட்டு வெளியே தள்ளியுள்ளார். ரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உடனே காவலர் அவரை வெளியே தள்ளியுள்ளனர். அச்சமயத்தில் ரெயில் புறப்பட்டுவிட்டது. ஓடும் ரயிலில் இருந்து வெளியே விழுந்த ரிதா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், ரிதா ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் மார்பில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 
 
மானிக் பேசுகையில், “ரயில் பெட்டிக்குள் ஏறிய நபர் என்னிடம் இருந்த ரூபாய் 3,500-யை பிடுங்கி கொண்டார். எனது மகன் ஜெய்தீப்பை கடுமையாக தாக்கினார். என்னுடைய மகளை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்தார். அந்த நபர் காவலர் சீருடையில் இருந்தார். வாக்கி-டாக்கியும் வைத்திருந்தார்.” என்று கூறினார். 
 
டாக்டர் ராஜேஸ் குமார் சிங் பேசுகையில், ரிதா மற்றும் ஜெய்தீப் என்று இரண்டு பேர் இங்கு அனுமதிக்கப்பட்டனர். ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட ரிதா மார்பு பகுதியில் காயம் காரணமாக உயிரிழந்தார். என்று கூறினார். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரயில்வே காவல் படை காவலர் சரத் சந்திரா துபேயை அடையாளம் கண்டபின்னர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். “நாங்கள் குற்றவாளியை காவலில் எடுத்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தக்கநடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ரயில்வே காவல்துறை அதிகாரி ஒ,பி. சிங் தெரிவித்துள்ளார்.