தொடர்புடைய செய்திகள்
- இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாக உள்ளது: கார்கேவுக்கு எம்.ஏ.பேபி அனுப்பிய பரபரப்பு கடிதம்!
- காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட்டை விஜய் கொடுத்தது ராஜதந்திரமா? திமுகவின் கமெண்ட் என்ன?
- இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக? ராகுல் காந்தி முன்னிலையில் இன்று ஆலோசனை?
- டெல்லியில் நாளை கூடும் 'இந்தியா' கூட்டணி: முக ஸ்டாலின் இல்லாத முதல் கூட்டம்..
- இந்தியா கூட்டணியில் இனிமே நாங்க இல்ல!.. திமுக அதிரடி அறிவிப்பு..
டெல்லியில் ராகுல் காந்திக்கு எதிரான பேனர்களை வைத்தது நாங்கள் தான்.. முரசொலியில் வெளியான செய்தி...!
புது டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை திமுக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. அதேநேரத்தில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய இந்தி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்செயல் கூட்டணிக்கு எதிரானவர்களின் வேலை என்று கருதப்பட்ட நிலையில், இந்த பேனர்களை திமுகதான் வைத்தது என்பதை அக்கட்சியின் நாளிதழான முரசொலி இன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி தங்களுக்கு இழைத்த துரோகத்தினால் திமுக தோழர்கள் மிகுந்த மனக்காயமடைந்துள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே ஜூன் 8ஆம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தை திமுக புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி தங்களை சார்ந்து வளர்ந்துவிட்டு, இன்று தங்களின் முதுகில் குத்திவிட்டதாக அந்த பேனர்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொள்பவர்கள் எப்படி ஒன்றிணைந்து மக்களுக்காக போராடுவார்கள் என்ற கேள்வியும் அதில் எழுப்பப்பட்டுள்ளது. டெல்லியின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் விமர்சனங்கள் மட்டுமன்றி, சரத்பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸை விமர்சித்து பேசிய கருத்துக்களும் இந்தியில் இடம்பெற்றுள்ளதாக முரசொலி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Edited by Siva
