தொடர்புடைய செய்திகள்
- பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ.. சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்...
- கிளாம்பாக்கத்தில் பஸ் வரவில்லை என போராட்டம் செய்தவரும் 200 ரூபாய் உபியா? கண்டுபிடிக்க விர்ச்சுவல் வாரியர்ஸ்...
- கொல்கத்தாவில் முதல்முறையாக தொழுகைகள் இல்லாத சாலை: முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவால் மாற்றம்..!
- டெல்லி - நொய்டா விமான நிலையத்தின் பயண நேரம் வெறும் 21 நிமிடங்கள்.. வருகிறது அதிவேக விரைவு ரயில்..
- ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்.. சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக டாக்டர் பி.கே.செந்தில்குமாரி
மும்பை - ஹைதராபாத் புல்லட் ரயில்.. பயண நேரம் வெறும் 3 மணி நேரம் தான்.. 300 கிமீ வேகம்..
மும்பை மற்றும் ஹைதராபாத் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தற்போது தயாராகியுள்ளது. இந்த புதிய ரயில் பாதை செயல்பாட்டிற்கு வரும்போது, இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் தற்போதைய 15 மணி நேரத்திலிருந்து வெறும் 3 மணி நேரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த புல்லட் ரயில் திட்டம் மொத்தம் 671 கிலோமீட்டர் தூரத்தை கொண்டதாகும். இந்த தடம் மகாராஷ்டிராவில் 457 கி.மீ, கர்நாடகாவில் 121 கி.மீ மற்றும் தெலங்கானாவில் 93 கி.மீ என மூன்று மாநிலங்கள் வழியாக செல்கிறது. இந்த ரயில்கள் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடியவை.
இந்த வழித்தடத்தில் மும்பை, புனே, லோனாவாலா, சோலாப்பூர், கலபுரகி, விகாராபாத் மற்றும் ஹைதராபாத் உட்பட பல முக்கிய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மகாராஷ்டிராவின் கடினமான மலைப்பகுதியிலும், மற்றும் 24 கி.மீ தூரத்திற்கு 13 சுரங்கப்பாதைகளும், 35 கி.மீ தூரத்திற்கு நிலத்தடி பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.
சர்வதேச விமான நிலையத் தரத்தில் அமையவிருக்கும் ஒவ்வொரு ரயில் நிலையமும் அதிநவீன வசதிகளுடன் இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 63,000 பயணிகள் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக தேசிய அதிவேக ரயில் கழகம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
Edited by Siva
